சிம்பு & கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தலைப்பு என்ன தெரியுமா..?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிம்பு & கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. சிம்புவிற்கு நல்ல கம்பேக் என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு , பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார் அதற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு புதிய திரைபடத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிப்பதாகவும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து தற்போது அந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!
February 6, 2025![rohit sharma hardik pandya](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-hardik-pandya.webp)
விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!
February 6, 2025![Virat Kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli.webp)