நடிகர் தனுஷ் நடிப்பில் ராட்சசன் பட இயக்குனரான ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு “வால் நட்சத்திரம்” என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார் .அதன் பின் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் அவர்களின் படத்தில் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் அறிவிப்பு ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின் ராம்குமார் அறிவித்திருந்தார்.இதன் ஆரம்ப பணிகள் கடந்த ஆண்டிலிருந்து நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது . சமீபத்தில் தனுஷ்-ராம்குமார் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி பதிப்பிலும் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக,அதாவது இந்த படத்தை பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ராம் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்திற்கு “வால் நட்சத்திரம்” என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சயின்டிஃபிக் திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…