சிவகார்த்திகேயனின் “டாக்டர்” படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.?
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலுள்ள ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும் , அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் டாக்டர் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.அதிலும் செல்லம்மா பாடலுக்கு ஆடாதவர் யாரும் இல்லை என்றே கூறலாம்.அந்த அளவுக்கு ஹிட் அடித்தது .
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த சிவகார்த்திகேயனிடம் டாக்டர் படம் குறித்த கேட்ட போது , டாக்டர் படத்திலுள்ள ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தான் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறினார்.மேலும் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஊரடங்கிற்கு முன்பு படமாக்கப்பட்டதாகவும் கூறிய சிவகார்த்திகேயனிடம் டாக்டர் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அது தயாரிப்பாளர் விருப்பம் தான் என்று கூறிய அவர் டாக்டர் திரைப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.