உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன தெரியுமா…?
உடல் எடை என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த உடல் எடையை குறைப்பதற்கு பல மருந்துகள் எடுத்தும் குறைந்த பாடில்லை. ஆனால் அதற்க்கு மாறாக பல பக்க விளைவுகளை நாமே கொள்கிறோம்.
உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் :
அளவுக்கு அதிகமான சாப்பாடு :
” அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு ” என்பது பழமொழி, அனால் இது தான் உண்மையும் கூட. நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அந்த உணவில் உள்ள கலோரியானது உடம்பில் அதிகமாக சேமிக்கப்பட்டு, உடல் எடை அதிகரிக்கிறது.
இரத்த சிவப்பணுக்கள் குறைவு :
உடலில் காணப்படும் இரத்த சிவப்பணுக்கள் குறையும் போது, இந்த குறைபாடு நமது உடலில் பருமனை அதிகரிக்க செய்கிறது.
சைனஸ் மற்றும் ஆஸ்துமா :
சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் போது நாம் அதற்க்கு மருந்து எடுக்கிறோம். இந்த மருந்துகளின் பின் விளைவு உடல் பருமனாக இருக்கிறது.
தைராயிடு :
தைராயிடு கோளாறுகளினால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
மாதவிடாய் சுழற்சி :
பெண்களுக்கு மாதவிடாய் முறையாக வராமல் இருப்பது, குறைந்த அளவில் வெளியேறுவது, கருப்பை சார்ந்த கோளாறுகள் போன்ற காரணங்களால் உடல் பருமன் அதிகரிக்கிறது.