பெண்களே உங்களுக்கு எலும்பு தேய்மானம் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா?
- பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள்.
பெண்கள் பொதுவாகவே ஆண்களை விட கொஞ்சம் பலவீனமானவர்கள் தான். ஆனால், வீட்டில் செய்யும் பெண்களும் சரி, அலுலகங்களில் வேலை செய்யும் பெண்களும் சரி, தங்களது உடல் பெலத்திற்கு மீறி வேலை செய்யும் போது சில ஆரோக்கிய கேடுகள் ஏற்பாட கூடும்.
தற்போது உள்ள நாகரீகமான காலகட்டத்தில் பெண்கள் வேலையே செய்ய தேவையில்லை என்கிற அளவுக்கு, அனைத்து வேலைகளுக்கும் மின் இயந்திரங்கள் வந்துவிட்டன.
மின் இயந்திரங்கள்
ஆனால் இந்த மின் இயந்திரங்களின் வருகைக்கு முன், பெண்கள் தங்களது உடலை அசைத்து வேலை செய்யும் அளவுக்கு, அம்மிக்கல், ஆட்டுக்கலில் மாவு அரைப்பது, கைகளால் துணி துவைப்பது போன்ற பல வேலைங்களை தங்களது உடலையே இயந்திரமாக பயன்படுத்தி செய்து வந்தனர்.
ஆண்களுக்கு சமமாக வேலைசெய்யும் பெண்கள்
இன்று பெண்கள் அறிவில் சிறந்தவர்களாகவும், பல பட்ட படிப்புகளை படித்து முடித்துவிட்டு, அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் வேலை செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் அதிகமாக வீட்டில் தங்களது உடல் உழைப்பை பயன்படுத்தி வேலை செய்வதில்லை. அனைத்து வேலைகளையும் மின் இயந்திரங்கள் செய்து முடித்து விடுகிறது.
உடற்பயிற்சி
அனைத்திலும், பெண்களின் உடல் உழைப்பு குறைந்து, மின் இயந்திரங்களின் ஆதிக்கம் பெருகி விட்டது. இதனால், உடலை அசைத்து வேலை செய்வதற்கேதுவான நிலை ஏற்படுதில்லை. எனவே உடலை அசைவுக்காக பெண்களுக்கு உடற்பயிற்சி தேவைப்படுகிறது.
ஹார்மோன் சமநிலையின்மை
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஹார்மோன்கள் தான். உடலில் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியாக இயங்கவில்லை என்றால், இது உடல் ஆரோக்கியத்தில் பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடும்.
இவை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால், முதல் நமது உடலில் மாதவிடாய் பிரச்னை தான் ஏற்படும். இதனை தொடர்ந்து பல பிரச்சனைகள் உருவாகும். நமக்கு அடிக்கடி உருவாகும் தலைவலி மற்றும் மனா அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே ஹார்மோன்களின் சமநிலையின்மை தான்.
இந்த ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, பெண்கள் 30 வயதை தாண்டி விட்டால், மூட்டு வலி முதுகுவலி போன்ற நோய்கள் ஏற்படுகிறது. மேலும், பெண்களுக்கு உடல் எடை அதிகரித்தல், வயது முதிர்ந்தவர் போன்ற தோற்றம் என பல நோய்கள் ஏற்படுகிறது.
வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்ணாதீங்க
இன்றைய சூழலில் 80% பெண்கள் இந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை பொறுத்தவரையில் தினமும், கீழே உட்கார்ந்து எழுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். மேலும் வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகிப்பாதை தவிர்க்க வேண்டும்.
உணவு
முக்கியமாக பெண்கள் உணவு உண்பதில் கவனம் செலுத்த வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பாகிச்சை காய்கறிகள், மீன், முட்டை, பால், தயிர் போன்ற உணவுகளை உன்ன வேண்டும். அப்படி உண்ணவில்லை என்றால் நமது உடல் ஆரோக்கியம் பாதிப்படையாக் கூடும்.
மாதவிடாய்
மேலும், பெண்கள் மாதவிடாய் சுழற்சி பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் என்பது கர்ப்பப்பையை சுத்தப்படுத்தக் கூடிய ஒன்று. குறிப்பிட்ட நாட்களுக்குள் இந்த சுழற்சி நடைபெற வேண்டு. நாட்கள் தள்ளி போனால், மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.
அவ்வாறு பரிசோதனை செய்யாமல், அலர்ச்சியமாக விட்டால், அது குழந்தையினமை பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும்.