கர்ணன் படத்தின் டிரைலர் வெளியாகாத காரணம் என்ன தெரியுமா…??

கர்ணன் படத்தின் டிரைலர் வெளியாகாத காரணம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நேற்று இந்த திரைப்படத்திற்கு தணிக்கையில் சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டீசர் மட்டுமே வெளியான நிலையில் டிரைலர் என் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில், அதற்கான விளக்கம் தற்போது படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆம், தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக படத்தின் டிரைலர் படக்குழுவினர் ரிலீஸ் செய்யாமல் படத்தை வெளியீடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.