குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா ?
- குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு இது தான் காரணம்.
பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு பிரச்னை என்றால், அதனை பெற்றோர்களால் தாங்கி கொள்ள இயலாது. குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அனைத்துவகையான சத்துக்களுடனும் பிறந்தால் தான் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
குழந்தையின் ஆரோக்கியம்
குழந்தை வயிற்றில் இருக்கும் போது, பெற்றோர்களை சத்துள்ள உணவுகளை சாப்பிட சொல்லுவதற்கு காரணம் இதுதான். குழந்தை வயிற்றில் இருக்கும் போது, குழந்தையின் ஆரோக்கியம் பெற்றோரின் கைகளில் தான் இருக்கிறது.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, அவர்களுக்கு வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால், குழந்தை எடை குறைவாக தான் பிறக்கும் என ஒரு ஆய்வின் போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பெண்கள் கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயின் உடலில் எந்த அளவு உள்ளது என்பதை பொறுத்து தான் பிறக்கும் குழந்தையின் எடை தீர்மானிக்கப்படுகிறது.
சூரிய ஒளி
வைட்டமின் டி சூரிய ஒளியில் தான் உள்ளது. வைட்டமின் டி நிறைந்த உணவு என்று எந்த உணவையும் குறிப்பிட்டு சொல்ல இயலாது. வைத்திட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காதது தான்.
சூரிய ஒளி போதுமான அளவு உடலுக்கு கிடைக்காத பட்சத்தில், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் பாதிக்கப்படுகிறது. மேலும் இது எலும்பு வளர்சிதை மாற்றங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே வைட்டமின் டி தான் குழந்தை எடை குறைவாக பிறக்க மிக முக்கிய காரணமாக அமைகிறது.
எடை குறைவாக இருக்கும்
கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு வைட்டமின் டி மட்டும் குறைவாக இருந்து, மற்ற அனைத்து சத்துக்களும் போதுமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தால், பிறக்கும் குழந்தையின் எடை வழக்கத்தை விட 46 கிராம் எடை குறைவாக பிறக்கும் என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்ப்பமான பெண்களுக்கு 3 மாதத்தில் போதிய அளவு வைட்டமின் டி தாயாரின் உடலில் இல்லையென்றால், கருவில் உள்ள குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கபடும்.
உடலில் வெயில் பட வேண்டும்
எனவே கர்ப்பமாக உள்ள பெண்கள், வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உடலில் வெயில் படுமாறு நடந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால், குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதும், நோயின்றி பிறப்பதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.