இந்தியர்களின் உணவில் பெரும்பாலும் சேர்க்கப்பட கூடிய ஒரு காய்கறிகளில் ஒன்று என்றால் வெங்காயத்தை சொல்லலாம். வெங்காயமின்றி உணவு சமைக்கும்போது அதில் சுவை இருக்காது என கூட இந்தியர்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வெங்காயம் அவர்களின் முக்கியமான பொருள் ஆகிவிட்டது. ஆனால் இந்த வெங்காயம் சுவைக்காகவும் உணவுக்காகவும் மட்டுமல்லாமல், இதில் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வெங்காய சாற்றில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுவதால் இளமையில் ஏற்படக் கூடிய முதுமை தோற்றத்தை மறைய செய்வதுடன் தொற்று நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட கூடிய தன்மையும் இது கொண்டுள்ளது. உணவுகளின் தரத்தை உயர்த்த பயன்படுத்தப்பட்டாலும், இது சற்று துர்நாற்றம் கொண்டது என பலரால் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் இந்த வெங்காயத்தில் அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை அடங்கி உள்ளது. இந்த வெங்காயத்திலுள்ள சாறை நாம் உட்கொள்ளும் பொழுது நமது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் நமது உடலில் முடி மற்றும் சருமத்திற்கு தேவையான சில ஆரோக்கியங்களையும் அள்ளித்தருகிறது. அதாவது வெங்காயச்சாறு மூலமாக எப்படி உடலின் ஆரோக்கியத்தை கொண்டு வர முடியும் என்பது குறித்து நாம் இன்று பார்க்கலாம். தோலுரித்த வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி ஜூஸ் பிழிந்து அதன் நீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் சிறு துளி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளும் பொழுது கெட்டுப்போகாமல் இருக்கும் மற்றும் பயன்படுத்த உகந்ததாக மாறிவிடும்.
வெங்காயத்தில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக கணினியில் உள்ள கிருமிகளை அளிப்பதற்கு இது பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் இன்சுலின் காரணமாக நமது கூந்தலுக்கு அளவுக்கதிகமான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன் அதிகளவில் கூந்தல் வளரும் உதவுகிறது. குடலியக்கத்தை மேம்படுத்த உதவுவதுடன் மலச்சிக்கல் பிரச்சனையில் வரவிடாமல் தடுக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு முக்கியமான ஒரு ஆரோக்கிய காரணியாக இது பயன்படும். மேலும் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க வெங்காயம் உதவுவதுடன் ஆரோக்கியமான சருமத்தை பேணிக்காக்கவும் பயன்படுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்பு காரணமாக முகத்தில் காணப்படக்கூடிய பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்கவும் பயன்படுகிறது.
புற்றுநோயை தடுக்கக்கூடிய பிளவனாயிடு மற்றும் கந்தக கலவைகள் இதில் அதிகம் உள்ளதால் புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடுவதுடன் நுரையீரல் மற்றும் கருப்பை புற்று நோயின் பரவலையும் குறைத்து செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் பொடுகு தொல்லை நீங்க தலையில் பேக் போல இதை பயன்படுத்தலாம். அப்படியே வெங்காயத்துடன் அரைத்து பேக் போல நமது தலையில் ஒரு 15 நிமிடம் வைத்து விட்டு எப்பொழுதும் போல தலையை அலசி வர தலையில் உள்ள பொடுகு மற்றும் முடி உதிர்தல் நீங்கும். இத்தனை நன்மைகள் கொண்ட வெங்காயத்தை சுவைக்காக மட்டுமல்லாமல் நமது உடலின் ஆரோக்கியத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்துவோம்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…