உலகின் மிக விலையுயர்ந்த ஆணுறையின் விலை எவ்வளவு தெரியுமா..?

Default Image

200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணுறையின் விலை 460 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ .44 ஆயிரம்) என்று கூறப்படுகிறது.

கருத்தடை வழிமுறைகளில் ஆணுறைகள் இன்னும் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இன்று ஆணுறைகள் மளிகைக் கடைகளிலிருந்து, மருத்துவ கிளினிக் வரை எளிதில் கிடைக்கின்றது. அவை குறைந்த விலை என்பதால் அனைவரும் அதை எளிதாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஆரம்பத்தில் ஆணுறைகள் செல்வந்தவர்கள் மட்டுமே பயன்படுத்தினார்கள்  என்பது உங்களுக்குத் தெரியுமா..? 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆணுறைக்கு என்ன விலை இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்..? உங்களுக்குத் தெரியாவிட்டால், அப்போது ஒரு ஆணுறையின் விலை 460 டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.44 ஆயிரம்) என்று கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, சில ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, ஸ்பெயினில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு பெட்டி கிடைத்தது. இந்த பெட்டி திறந்தபோது, ​​அதிலிருந்து ஒரு ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அளவு 19 செ.மீ என்று கூறப்பட்டது. ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த ஆணுறை சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்டது. இந்த ஆணுறை கட்டாவிக்கி என்ற ஆன்லைனில் (Catawiki) ஏலம் விடும்போது அதன் மதிப்பின் விலையை விட இரண்டு மடங்கிற்கு ஆணுறை விற்கப்பட்டது.

இந்த வரலாற்று ஆணுறை நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து ஒரு நபர் வாங்கியுள்ளார். ஆன்லைனில் ஏலம் விடப்பட்ட இந்த ஆணுறை மிகவும் அரிதானது என்று நம்பப்படுகிறது. இத்தகைய அரிய ஆணுறைகளை இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அருங்காட்சியகங்களில் மட்டுமே காண முடியும். 19 செ.மீ நீளமுள்ள இந்த ஆணுறை இதுவரை உலகின் மிக விலையுயர்ந்த ஆணுறை என்று கூறப்படுகிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் விலை உயர்ந்ததாகவும், அதை தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதாலும் (தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால்), ஆணுறைகளின் விலை மிக அதிகமாக இருந்தது. இதனால், அதை செல்வந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் மலிவான ரப்பரில் ஆணுறைகள் தயாரிக்கப்பட்ட பின்னர், செம்மறி குடலில் இருந்து தயாரிக்கப்படும் ஆணுறைகள் படி படியாக குறைந்தது என தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்