வலிமை படத்தின் அஜித் பெயர் என்ன தெரியுமா.? சுமித்ரா கொடுத்த அப்டேட்.!

Default Image

வலிமை திரைப்படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜுன் என்று நடிகை சுமித்ரா கூறியுள்ளார். 

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் அடுத்ததாக நடிகர் அஜித்குமார் வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது.இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வலிமை படத்தில் நடிகை சுமித்ரா அஜித்திற்கு அம்மாவாக நடிக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் நேர்காணல் மூலம் வலிமை படத்தில் அஜித்தின் பெயர் என்ன என்று கேட்டதற்கு அவர் ” அர்ஜுன்” என்று கூறியுள்ளார்.

படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாறி பாடலை நேற்று இரவு 10.45 மணிக்கு சோனி மியூசிக் சேனலில் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான இந்த பாடல் சில மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்