தித்திக்கும் சுவை கொண்ட சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

Published by
Rebekal
இயற்கையில் வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி இன்று அறியலாம்.

சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

சிறிய வகை மரமாக வளர்ந்தாலும் அட்டகாசமான சுவை கொண்ட சீத்தாப்பழம், விதைகள் மூலமாக எளிதில் வளரக்கூடிய தன்மை கொண்டது. இதில் விட்டமின், புரதம், இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் அதிக அளவு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வருவதால் இதய நோய் வராமல் தடுத்து ரத்த ஓட்டத்தை சீர் செய்யலாம். இந்த சீதாப்பழத்தில் நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சக்தி உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சீதாப்பழத்தை கட்டாயம் பயன்படுத்தலாம். காச நோயின் ஆரம்ப நிலையை மாற்றக்கூடிய தன்மை கொண்ட மிக அட்டகாசமான சீத்தாப்பழம், உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றும் தன்மையும் கொண்டுள்ளது.

கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நாவறட்சி மற்றும் உடல் வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வெந்தயத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது குடல்புண் ஆறி ஆரோக்கியமான குடல் உருவாகும். அதிக அளவு நீர்ச் சத்து கொண்ட  சீத்தா பழம் மலச்சிக்களை நீக்குவதுடன், ஜீரணக் கோளாறுகளையும் போக்குகிறது. ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சோகையை போக்கும் திறன் கொண்டது. உடல் சோர்வையும் போக்கி புத்துணர்வு தருகிறது. பித்த நோயாளிகள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது பித்த நோய் மற்றும் மன நோய் ஆகியவை குணமடையும். திராட்சை பழ சாற்றுடன் சீதாப்பழத்தை கலந்து சாப்பிடும் பொழுது உடல் வலிமை பெறும், எலுமிச்சை சாறுடன் இப்பழத்தை கலந்து குடித்து வரும் பொழுது சிறுநீர் கடுப்பு நீங்கி குணம் அடையலாம்.
Published by
Rebekal

Recent Posts

ஒரே நிகழ்ச்சியில்…ஒரே வரிசையில் பாராமுகத்தில் தனுஷ்-நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…

39 seconds ago
Live : திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் …இந்தியா-ஆஸி. டெஸ்ட் போட்டி வரை..!

Live : திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் …இந்தியா-ஆஸி. டெஸ்ட் போட்டி வரை..!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…

17 mins ago

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…

38 mins ago

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி? நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…

2 hours ago

அடுக்கப்பட்ட குற்றச்சாட்டு! அதானி குழுமம் உடனான 2 திட்டங்களை ரத்து செய்தது கென்யா!

நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…

3 hours ago

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

13 hours ago