தித்திக்கும் சுவை கொண்ட சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

இயற்கையில் வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி இன்று அறியலாம்.
சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
சிறிய வகை மரமாக வளர்ந்தாலும் அட்டகாசமான சுவை கொண்ட சீத்தாப்பழம், விதைகள் மூலமாக எளிதில் வளரக்கூடிய தன்மை கொண்டது. இதில் விட்டமின், புரதம், இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் அதிக அளவு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வருவதால் இதய நோய் வராமல் தடுத்து ரத்த ஓட்டத்தை சீர் செய்யலாம். இந்த சீதாப்பழத்தில் நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சக்தி உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சீதாப்பழத்தை கட்டாயம் பயன்படுத்தலாம். காச நோயின் ஆரம்ப நிலையை மாற்றக்கூடிய தன்மை கொண்ட மிக அட்டகாசமான சீத்தாப்பழம், உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றும் தன்மையும் கொண்டுள்ளது.
கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நாவறட்சி மற்றும் உடல் வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வெந்தயத்துடன் சீதாப்பழத்தை சாப்பிட்டு வரும்பொழுது குடல்புண் ஆறி ஆரோக்கியமான குடல் உருவாகும். அதிக அளவு நீர்ச் சத்து கொண்ட சீத்தா பழம் மலச்சிக்களை நீக்குவதுடன், ஜீரணக் கோளாறுகளையும் போக்குகிறது. ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சோகையை போக்கும் திறன் கொண்டது. உடல் சோர்வையும் போக்கி புத்துணர்வு தருகிறது. பித்த நோயாளிகள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது பித்த நோய் மற்றும் மன நோய் ஆகியவை குணமடையும். திராட்சை பழ சாற்றுடன் சீதாப்பழத்தை கலந்து சாப்பிடும் பொழுது உடல் வலிமை பெறும், எலுமிச்சை சாறுடன் இப்பழத்தை கலந்து குடித்து வரும் பொழுது சிறுநீர் கடுப்பு நீங்கி குணம் அடையலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025