தமிழ் சினிமாவில் 10 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் எது தெரியுமா..??
தமிழ் சினிமாவில் முதலில் 10 கோடி வசூல் செய்த திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா படம் என்று தகவல்கள் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் வசூல் சக்கரவர்த்தி பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் ரஜினி தான். முந்திய காலகட்டத்தில் ரஜினியின் படங்கள் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முதலில் 10 கோடி வசூல் செய்தது திரைப்படமே ரஜினி படம் தான்.ஆம், கடந்த 1989 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.சுந்தர் ராஜன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
சிறந்த காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் 1989 ல் தமிழ் சினிமாவில் முதல் 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காலத்தில் வெளியாகும் படங்கள் கோடி கணக்கில் வசூல் செய்வது சாதாரணமாக இருந்தாலும் முந்திய காலகட்டங்களில் ஒரு கோடி என்பது 100 கோடிக்கு சமம். ஆனால் அந்த காலகட்டத்திலும் நடிகர் ரஜினி காந்த் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார்.