பொண்ணுங்களுக்கு வரபோகும் கணவர்கிட்ட எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன தெரியுமா?

Default Image

இந்த உலகத்தில் யாருமே ஒழுங்காக இருப்பது இல்லை. எல்லாருமே நல்ல குணமும், தீய குணமும் கலந்து தான் இருக்கிறோம். இதை நாமும் நன்கு தெரிந்துகொள்வோம் இருந்தாலும் திருமணம் என்று வரும்போது நாம் எல்லா நல்ல குணங்களும் கொண்டவர்கள்தான் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
திருமணம் என்று வரும்போது பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். திருமணம் என்பது பெண்களுக்கு சமூக பாதுகாப்பைத் தாண்டிய ஒன்றாக இருக்கிறது. அதனால் அவர்கள் அவ்வளவு சீக்கிரமாக தங்கள் கணவரை தேர்ந்தெடுத்துவிட மாட்டாங்க.
பெண்கள் தனக்கென ஒரு துணையை தேர்ந்தேடுக்கும்போது அவர்களிடம் சில அடிப்படை குணங்கள் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். உங்கள் துணைக்கு உண்மையாக இருப்பது மிகவும் அவசியம்.தனக்கு வருகின்ற கணவனைத் தேர்ந்தெடுக்கும்போது பெண்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஒரு துணையைத் தேடுகிறார்கள், இதனால் அவர்கள் துணையை நம்பி தான் தங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க முடியும்.
பெண்கள் எப்போதுமே பொறுப்பற்ற ஆண்களை விரும்பமாட்டார்கள், குறிப்பாக திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கும் போது பொறுப்பற்ற ஆண்களை விரும்ப மாட்டார்கள். பொறுப்பு என்பது காதலில் மட்டுமில்லாமல் குடும்பம் தொடர்பான விஷயங்கள், தொழில் விஷயங்கள் என அனைத்திலும் பொறுப்பாக இருக்க வேண்டும்.
பொறுப்பானவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்பது பெண்களின் நம்பிக்கையாகும். நீங்கள் விரும்பும் துணை அவரது வாழ்க்கையை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் பொறுப்பானவராக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
பொதுவாக எல்லாருக்குமே நேசிக்கப்படுவது என்பது மிகவும் பிடித்ததாகும்.அதனால் பெண்கள் தங்களின் குறைகளை கூட பார்க்காமல் தன்னை காதலிக்கும் ஒரு ஆணைதான் விரும்புவார்கள். அவர்கள் மீது அக்கறையுடன், பாசமும் செலுத்துவதும் காதல்தான்.இது தங்களின் கணவரை நினைத்து பெண்களை பெருமையடையச் செய்யும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்