அளவுக்கு அதிகமான மஞ்சளை உணவில் சேர்த்துக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?
மஞ்சள் என்பது ஒரு கிருமி நாசினி; மருத்துவ குணம் கொண்ட ஒரு பொருள்; உணவு பொருட்களை தயாரிக்கவும் இதை பயன்படுத்தலாம். மஞ்சளின் மகத்துவம் என்பது உலகம் அறிந்ததே! அதிலும் தமிழர்கள் தாங்கள் செய்யும் நற்காரியங்கள் அனைத்திலும் கூட மஞ்சளால் சாமி செய்து வணங்குவர். உலகளாவிய மக்களிடையே மஞ்சளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க மஞ்சளை அளவுக்கு அதிகமாக உண்டால் அல்லது உணவில் அதிக அளவு மஞ்சளை சேர்த்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பது பற்றி இந்த பதிப்பில் காணலாம்.
உடல் எடை
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை ஆய்வு ஒன்றிற்கு அழைத்து, அவர்கள் உட்கொள்ளும் உணவினில் அதிக அளவு மஞ்சள் சேர்த்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கொடுக்கப்பட்டு, சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அப்படி நடத்தப்பட்ட ஆய்வினில் மஞ்சள் அதிகம் சேர்த்த உணவினை உண்ட மக்களின் எடை நன்கு குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஞ்சள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்க உதவும்; ஆகையால் உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள் மஞ்சள் அதிகம் சேர்த்த உணவினை உட்கொண்டு தங்களது எடையைக் குறைக்கலாம்.
முடக்கு வாதம்
வயதான பின் ஏற்படும் அல்லது அதிக உபயோகத்தால் எலும்புகள் தேய்ந்து ஏற்படும் முடக்கு வாதத்தை போக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது மஞ்சள். அதிக அளவு மஞ்சள் சேர்த்த உணவை உண்ட மக்களில் முடக்குவாதம் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மனநிலை
மன அழுத்தம் மற்றும் மன எண்ணங்களில் தொடர்ந்து ஏற்படும் மாற்றத்தைக் குறைத்து, மனநிலையை சீராக வைக்க மஞ்சள் கலந்த பால் உதவுகிறது.
இரத்தத்தின் சர்க்கரை
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்க மஞ்சள் கலந்த உணவுப்பொருட்கள் பெரிதும் உதவுகின்றன.
மஞ்சளின் மகத்துவம்
மூளையில் ஏற்படும் அல்சைமர் நோய் ஏற்படாதவாறு தடுக்கும் திறனையும், புற்றுநோய், இருதய நோய்களைத் தடுக்கும் ஆற்றலையும், பெருங்குடல் மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும் திறனையும் மஞ்சள் கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.