செய்தித்தாளில் உணவை வைத்து சாப்பிட்டால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா….?
ரோட்டோர கடைகளிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி அதிகமாக செய்தி தாள்களில் தான் எண்ணெய் உணவுகள் வைத்து தருகிறார்கள். அவ்வாறு செய்தி தாள்களில் உணவுகளை வைத்து கொடுப்பதைப் நாம் பார்த்திருப்போம். ஏன் நாமே அவ்வாறு சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த செய்தி தாளில் உணவை உண்ணும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா?
அந்த செய்தித்தாளில் உள்ள மை நமது உணவில் படுகிறது. இந்த உணவை நாம் உண்ணுவதால் நமக்கு பல நோய்களை ஏற்படுத்தும். இந்த இரசாயனங்கள் உடலுக்குள் சென்று விஷமாகி நாளடைவில் நமது ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய ஒன்றாக மாறும்.
அதுமட்டுமால்லாமல் செய்தித்தாள் கொண்டு மூடப்பட்ட உணவு நமது ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமே உறுதிப்படுத்தி உள்ளதாம். இவ்வாறு செய்தி தாளால் மூடப்பட்ட உணவை சாப்பிடுவது மூலமாக என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
செரிமான உறுப்பு
செய்தி தாளில் பயன்படுத்தப்படும் மை காரணமாக நமது உணவில் அந்த இரசாயனங்கள் ஒட்டி கொள்ளும். இந்த இரசாயனங்கள் கலந்த உணவை நாம் சாப்பிடும் பொழுது நமது செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும்.
ஹார்மோன்கள்
செய்தி தாளில் பயன்படுத்தப்படும் மை காரணமாக நமது ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் நமது ஹார்மோன்களின் சமநிலையில் பாதிப்பு உண்டாகி பல நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
புற்றுநோய்
செய்தி தாளில் அச்சிடப் பயன்படும் மை உலறுவதற்காக ஒரு இரசாயனம் பயன்படுத்தப்படுமாம். இந்த இரசாயனம் நமது உடலுக்குள் செல்லும் பொழுது சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரலில் புற்றுநோயை உருவாக்குவதற்கான அபாயம் உள்ளதாம்.
கருவுறுதல்
பெண்கள் இந்த செய்தி தாளால் மூடப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் பொழுது அதிலுள்ள இரசாயனம் காரணமாக அவர்களின் கருவுறுதல் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.