பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்ட பழமும் அதிகம் கிடைக்காத பழமும் ஆகியது தான் விளாம்பழம். இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் இங்கு அறியலாம்.
விளாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மை உள்ளது. இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி ஆகிய பல சத்துக்கள் உள்ளன. அதில் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். தலை வலி, கண்பார்வை மங்கல், கை கால்களில் அதிக வேர்வை, என பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய மூல மருந்து விளாம்பழம் தான்.
இது அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ண கூடிய தன்மை கொண்டது. முதியவர்களுக்கு பல்லை உறுதி செய்யக்கூடிய ஒரு தன்மையையும் இது கொண்டுள்ளது. அதுபோல கர்ப்பிணி பெண்களும் இந்த விளாம்பழத்தை தாராளமாக சாப்பிடலாம். கர்ப்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இது உதவுகிறது. மேலும் மலச்சிக்கலுக்கு இது சிறந்த தேர்வாக அமையும், இதில் உள்ள நார்ச்சத்து கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய செரிமான கோளாறுகளை போக்க உதவும், மேலும் பொட்டாசியம் நரம்பு தூண்டுதலுக்கும் தசை சுருக்கம் மற்றும் உடல் பிடிப்புகளை தடுக்க உதவுகிறது. ஆனால் கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய்மார்களில் நீரிழிவு உள்ளவர்கள் இதை உட்கொள்வது தவறு, ஏனென்றால் இதில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது.
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…