விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஷிவானி.! எந்த படத்தில் தெரியுமா.?!
விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ஷிவானி நாராயணன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து படத்தில் நடிகர் காளிதாஸ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்திலிருந்து அடுத்ததாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.