ஐந்தே நிமிடத்தில் அட்டகாசமான ரசம் வைப்பது எப்படி தெரியுமா? வாருங்கள் அறியலாம்!
வீட்டில் நாம் அசைவ உணவுகள் சமைக்கையில் கூடவே ரசம் இருந்தால் அந்த சாப்பாட்டை அடித்து கொள்ளவே முடியாது, ஆனால் ரசம் வைப்பது கடினம் என பல பெண்கள் நினைக்கின்றனர். எப்படி சுலபமாக வீட்டில் ரசம் வைப்பது என்பதை இன்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- பூண்டு
- சீரகம்
- மிளகு
- கொத்தமல்லி
- வெந்தயம்
- எண்ணெய்
- புளி
- தக்காளி
செய்முறை
முதலில் மிக்சியில் சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை ஒன்றாக போட்டு அறைந்து வைத்துக்கொள்ளவும். அந்த சமயத்தில் தேவையான அளவு புலி எடுத்து ஊற வைக்கவும். அதன் பின் 2 தக்காளிகளை கைகளால் பிசைந்து கூலாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு சட்டியில் என்னை ஊற்றி வெந்தயம் மற்றும் சீரகம் சேர்க்கவும், அதன் பின் மிக்சியில் அறைந்து வைத்துள்ள கலவையை சேர்த்து லேசாக வதங்க விடவும், அதன் பின் கைகளால் பிசைந்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். அதன் பின் புளியை கரைத்து ஊற்றவும், லேசாக சூடாகியதும் தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு லேசாக சேர்த்து கொதிக்கவிடவும், அதிகம் கொதிக்காமல் கொத்தமல்லி போட்டு இறக்கினால் அட்டகாசமான ரசம் தயார். நிறம் தேவைப்பட்ட மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.