தித்திக்கும் சுவையில் சுரைக்காய் அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா
சுரைக்காய் நமது உடலுக்கு மிகவும் ஊட்டம் அளிக்கும் காய்கறிகளில் ஒன்று.சில குழந்தைகள் சுரைக்காயை அதிகம் விரும்புவதில்லை.எனவே அவர்களுக்கு அல்வாவாக செய்து கொடுத்தால் இதனை மிகவும் விரும்பி சாப்பிட தொடங்கி விடுவார்கள்.
- சுரைக்காய் அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?
சுரைக்காய் அல்வா எப்படி செய்வது என்பதை பற்றி பதிப்பில் இருந்து படித்தறிவோம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் – 1 கப் (தோல் நீக்கி துருவியது)
சர்க்கரை – 15௦ கிராம்
வெது வெதுப்பான பால்-1 கப்
ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
கலர் பவுடர் – ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு – 10
நெய் – 4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய சுரைக்காய் போட்டு நன்றாக அதில் உள்ள நீர் வற்றும் வரை கிளற வேண்டும். நீர் நன்றாக வற்றியவுடன் பாலை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும். பின்பு சர்க்கரை, கலர் பவுடர் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
பின்னர் மற்றோரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு நெய் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும். இப்போது சுவையான அல்வாரெடி.