புரதச்சத்து அதிகமுள்ள சோயா பீன்ஸ் கிரேவி எப்படி செய்வது தெரியுமா…?

Default Image

தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமனால் பலர் அவதிப்படுகின்றனர். எனவே உடல் பருமனை போக்குவதற்கு உடற்பயிற்சி முதல் உணவு முறைகள் வரை பலர் பல கடுமையான செயல்களை செய்கின்றனர். இருந்தாலும் உடனடியாக உடல் எடை குறைந்து விடுவதில்லை. ஏனென்றால் அதிக அளவு கலோரிகள் உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடிய உடல் பருமன் விரைவில் மாறாது. நாம் உணவு உட்கொள்ளும் பொழுது குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும்.

இது பலருக்கு தெரியாது. புரத உணவுகளை அதிகம் உட்கொள்வதால் நமது உடல் வலுவாக மாறுவதுடன், நாம் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. எனவே ஒரு நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்தாலும், அன்றைய தினம் நீங்கள் புரதம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். மேலும் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை எடுக்க வேண்டும். இதற்கு சோயா ஒரு நல்ல உதாரணம்.

சோயாவில் குறைந்த கலோரி, அதிக புரதம் உள்ளது. எனவே இந்த சோயாவை நமது உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது உடல் பருமன் குறைவதுடன் உடலுக்கு தேவையான புரத சத்துக்களும் நமக்கு அதிக அளவில் கிடைக்கும். இந்த சோயாவை எப்படி செய்து சாப்பிட்டால் நாம் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சோயாவிலுள்ள ஊட்டச்சத்துக்கள்

சோயா துண்டுகள் சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரிந்த உண்மை தான். இதில் அதிக அளவு புரதமும் குறைந்த அளவு கலோரிளும் உள்ளது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்தும் காணப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 கிராம் சோயாபீன்ஸ் உட்கொள்வதன் மூலமாக நமது உடலின் தினசரி புரதத் தேவை 70% பூர்த்தி  செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சோயா பீன்சில் வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது.

நன்மைகள்

சோயாபீன்ஸ் நாம் அதிக அளவு எடுத்துக் கொள்வது நமது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள நிறைவுறாக் கொழுப்பு காரணமாக நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

இந்த சோயா பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், பெருங்குடல் மற்றும் பெருங்குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கும் உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளதன் காரணமாக எலும்புகள் வலிமையாகவும் இந்த சோயா பீன்ஸ் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • சோயா
  • எண்ணெய்
  • சீரகம்
  • பூண்டு
  • கிராம்பு
  • இஞ்சி
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • வெங்காயம்
  • தக்காளி
  • உப்பு
  • கரம் மசாலா
  • வெந்தய தூள்

செய்முறை

வேக வைத்தல் : முதலில் சோயா துண்டுகளை தண்ணீரில் இலேசாக கழுவி அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து, 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விழுது தயாரிப்பு : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பூண்டு, கிராம்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து இவை நன்றாக வதங்கியதும், இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், தக்காளி மற்றும் அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு வதங்கிய பின்பு இறக்கி வைத்து ஆற வைக்கவேண்டும். ஆறியதும் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு விழுது போல நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சோயா குழம்பு : ஒரு வாணலியில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இது இரண்டு நிமிடங்கள் நன்றாகக் கொதித்ததும், அறைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கொள்ளவும். பின் நாம் வேக வைத்துள்ள சோயாவை இதில் சேர்க்க வேண்டும். அதன் பின்பு வெந்தயத் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கினால் அட்டகாசமான சோயா குழம்பு தயார். இது போன்று ஒரு முறை சோயாவில் செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் உடல் பருமனை குறைக்க மிகவும் உதவும். அட்டகாசமான சுவையுடனும் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்