சுரைக்காய் சிலருக்கு பிடிக்காது, சிலருக்கு பிடிக்கும். ஆனால், சுரைக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த சுரைக்காயில் அட்டகாசமான சுவையுள்ள கூட்டு செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
அரைக்க : முதலில் மிக்ஸி ஜாரில் பொரிகடலை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிக்க : குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கடுகு சேர்த்து நன்றாக தாளித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அவிக்க : பின் உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். இறுதியாக குக்கரில் உள்ள சுரைக்காய் நன்றாக வெந்ததும், பொடித்து வைத்துள்ள பொட்டு கடலையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அவ்வளவு தான் அட்டகாசமான சுரைக்காய் கூட்டு தயார்.
சுரைக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, நார்சத்து, தாது உப்புகள் ஆகியவை அடங்கியுள்ளது. இந்த சுரைக்காயை தொடர்ந்து சாப்பிடும் பொழுது கோடை காலத்தில் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்குவதற்கும், சிறுநீரகப் பிரச்சினைகள் நீங்கவும் உதவுகிறது. மேலும் பித்த வெடிப்புகள் குணமாகவும் இது உதவுகிறது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மூலம் சம்பந்தப்பட்ட வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சுரைக்காய் பெரிதும் உதவுகிறது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…