காலை நேரத்திற்கேற்ற அட்டகாசமான தக்காளி தோசை எப்படி செய்வது தெரியுமா…?
காலை நேரத்தில் எப்பொழுதும் இட்லி, தோசை தான் பெரும்பாலும் பலர் வீட்டில் செய்வார்கள். வழக்கம் போல செய்ததையே செய்து சாப்பிடுவதை விட வித்தியாசமான முறையில் தோசை, இட்லி செய்வது அட்டகாசமாக இருக்கும். இன்று தோசையில் தக்காளியை சேர்த்து எப்படி தக்காளி தோசை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- தக்காளி
- தோசை மாவு
- வத்தல் மிளகாய்
- பெருங்காயத்தூள்
- உப்பு
- சின்ன வெங்காயம்
செய்முறை
மாவு : முதலில் தோசை மாவில் தேவையான அளவு உப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும்.
விழுது : சிறிதளவு துவரம்பருப்பு, வத்தல் மிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தோசை : பின்பு தோசை மாவுடன் எடுத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். அதன் பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி தோசை மாவை ஊற்றி அதன் மேல் லேசாக எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு எடுத்தால் அட்டகாசமான தக்காளி தோசை தயார். மிகவும் ஈஸியான செய்முறை தான் ஒரு முறை செய்து பாருங்கள் நிச்சயம் சுவையாக இருக்கும்.