உண்ண உண்ண தெவிட்டாத தேன் மிட்டாய் செய்வது எப்படி தெரியுமா…?
தேன் மிட்டாய் நாம் அனைவரும் அறிந்த ஒரு இனிப்பு வகை தான். இந்த மிட்டாயை சிறியவர்கள் முதல் வயதானவர்கள் முதல் பிடிக்கும். இந்த மிட்டாயை கொடுக்க கொடுக்க சாப்பிட்டு கொண்டே இருக்கலாம். எவ்வளவு சாப்பிட்டாலும் தெவிட்டாத மிட்டாய். இந்த மிட்டாயை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
தேன் மிட்டாயை நம்மெல்லாம் செய்ய முடியுமா….? கண்டிப்பாக முடியும். இப்பொது எப்படி செய்வது என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
- உளுத்தம் பருப்பு – 2 கப்
- மைதா மாவு – அரை கப்
- அரிசி மாவு – அரை கப்
- சர்க்கரை – ஒன்றரை கப்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
சர்க்கரை பாகு செய்யும் முறை :
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து தெண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு கொதிக்க வைக்க வேண்டும்.
செய்முறை :
உளுந்தை ஊற வைத்து அரைத்த கொள்ள வேண்டும். பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, மைதா மாவு, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொரிந்து வந்த உடன் எடுத்து எண்ணெயை வடித்து விட்டு சூடான சர்க்கரை பாகில் போட்டு அரை மணி நேரம் கழித்து தனியாக எடுத்து தட்டில் வைக்க வேண்டும். இப்பொது நம் அனைவருக்கும் பிடித்த தேன் மிட்டாய் ரெடி.