மணமணக்கும் சுவையில் கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா
கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று. கேழ்வரகு நமது உடலுக்கு அதிக அளவு சத்தை தரக்கூடிய உணவுகளில் ஒன்று.
- மணமணக்கும் சுவையில் கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?
மணமணக்கும் சுவையில் கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – இரண்டு கப்
உளுந்து – ஒரு கப்
அரிசி மாவு – ஒரு கப்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)
தக்காளி – இரண்டு (நறுக்கியது)
காலிஃபிளவர் – அரை கப்(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு, அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு சேர்த்து முதல் நாள் இரவே நன்றாக கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உளுந்தை 4 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு மிளகு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு காய்கள் நன்கு வதங்கியவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
பின்பு தவாவில் தோசையை ஊற்றி வெந்ததும், நடுவில் காலிஃபிளவர் மசாலாவை வைத்து இரண்டாக மடித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை ரெடி.