வாழைப்பூவில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இந்த வாழைப்பூவை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும் சிறந்த இயற்கை உணவாக இருக்கும். இந்த வாழை பூவை வைத்து எப்படி காலை உணவுக்கு ஏற்ற அடை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
அரைக்க : முதலில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் ஆறு மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு இவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க : வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். அதனுடன் சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இவற்றை மாவுடன் கலந்து விடவும்.
அடை : தோசை கல்லை காய வைத்து அதில் எண்ணெய் தடவி நாம் கலந்து வைத்துள்ள மாவை அடை போல ஊற்றவும். அதன் பின் அதை சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால் அட்டகாசமான வாழைப்பூ வடை தயார்.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…