மணமணக்கும் சுவையில் முட்டை பணியாரம் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?
முட்டை பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் உணவு இதை எப்படி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள் :
முட்டை -4
இட்லி மாவு – ஒரு கப்
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை சிறிதளவு
வெங்காயம் -4
உப்பு -தேவையான அளவு
கடுகு -1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் வெங்காயம் , பச்சை மிளகாயை நறுக்கி கொள்ளவும்.பின்பு முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கடுகு ,உளுத்தம் பருப்பு , பச்சை மிளகாய் ,வெங்காயம் முதலியவற்றை சேர்த்து வதக்கி எடுத்து கொள்ளவும்.
பின்பு முட்டை மற்றும் தோசை மாவு ,உப்பு வதக்கியவற்றை ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.பின்பு ஒரு குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு கல்லிலும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி பின்பு பணியாரத்தை திருப்பி போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.