காண்டே போஹா எப்படி செய்வது என்பதை பற்றி நீங்கள் அறிவீரா
காண்டே போஹா நமது உடலுக்கு மிகவும் ஊட்டம் அளிக்கும் உணவுகளில் இதுவும்ஒன்று.
- காண்டே போஹா எப்படி செய்வது என்பதை பற்றி நீங்கள் அறிவீரா?
காண்டே போஹா எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
அவல் – 1/2 கப்
எண்ணெய் –2 டீஸ்பூன்
கடுகு – 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
பச்சை பட்டாணி – 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து நறுக்கியது)
சீரகம் – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேபில்லை போட்டு தாளிக்கவும்.பின்பு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயம், பச்சை பட்டாணி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதற்கு பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் ஒருபத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பின்பு அவலை போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு,அதனை வடிகட்டி அதில் போட்டு கிளறி கொத்தமல்லி தளைகளை தூவி இறக்கவும். இப்போது சூடான சுவையான காண்டே போஹா ரெடி.