தளபதி – 65க்காக விஜய் அவர்களுக்கு 70 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆம் தளபதியின் அடுத்த படத்தை நான்காவது முறையாக முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வதாகவும், எஸ். தமன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீரோயினுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் வெறும் 130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாகவும், இதற்காக விஜய்க்கு மாஸ்டர் படத்தை விட குறைவான சம்பளம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்காக 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில் தளபதி-65க்காக 70 கோடி ரூபாய் மட்டுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…