தனுஷின் பட்டாஸ் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
- இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படமும் தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் வெளியானது.
- தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் வசூல் விபரம்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்ககத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இவரது நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ள நிலையில், இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த பொங்கலுக்கு ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படமும் தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் வெளியான நிலையில், தனுஷின் பட்டாசு திரைப்படம் தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ 25 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.