உலகளவில் கொரோனாவின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?
கொரோனாவின் தாக்கம் தற்பொழுது உலகளவில் 50 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், உயிரிழப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் தாண்டி கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை. இதுவரை 5,500,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 346,719 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிர் இழப்பும் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 2,302,027 பேர் குணமாகி வீடு திரும்பவும் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 96,505 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 2,826 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்பொழுது, பாதிக்கப்பட்டவர்களில் குணம் ஆகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர 2,848,676 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.