உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா.?
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 4,256,022 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சீனாவின் ஊகான் நகரில் ஆரம்பமாகி தற்பொழுது உலகம் முழுவதையும் சூறையாடி கொண்டிருக்கும் உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த, வைரஸால் உலகின் பல நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது 4,256,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 287,332 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் 1,527,517 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர்.
நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 74,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரே நாளில் 3,403 பேர் உயிரிழந்துள்ளனர். குணமாகியவர்கள் மற்றும் இறந்தவர்கள் தவிர தற்பொழுது உலகம் முழுவதும் 2,441,173 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், 46,939 பேர் அதிகம் பாதிக்கப்பட்டு சீரியஸான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.