மதராசபட்டினம் படத்திற்காக ஏமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
மதராசபட்டினம் படத்திற்காக ஏமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா ஏமி ஜாக்சன் நடிப்பில் வெளியான திரைப்படம் மதராசபட்டினம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் ஏமி ஜாக்சன் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஏமி ஜாக்சன் 17-வயதில் (Miss Teen World) என்ற பட்டத்தை வென்றார். அதன்பின் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நடிகை ஏமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, நடிகை ஏமி ஜாக்சன் இப்படத்திற்காக 5 லட்சம் வங்கியுள்ளதாக தகவ்லக்ள் பரவி வருகிறது.