முகம் சுளிக்கும் மணம் கொண்டிருந்தாலும், நித்தியகல்யாணி தாவரத்தில் மருத்துவத் தன்மை எவ்வளவு உள்ளது தெரியுமா?
நித்தியகல்யாணி பூச்செடி என்றாலே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் மணம் பிறரை அருகில் செல்ல விடாமல் முகம் சுளிக்கும் வண்ணமாக இருக்கும். இதன் காரணமாக வெவ்வேறு பெயர்களாலும் அடைமொழி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தானாகவே வளரக்கூடிய இந்த நித்தியகல்யாணி செடி எவ்வளவு நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்துள்ளது என்பது குறித்து நமக்கே தெரிவதில்லை. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நித்தியகல்யாணியின் நன்மைகள்
இந்த நித்தியகல்யாணி எனும் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் கொண்டதாக தான் இருக்கிறது. இதன் வேர், இலை, பூ ஆகிய அனைத்துமே மருத்துவத்தில் மிகவும் பயன் கொண்டதாக இருக்கிறது. நாவல் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் அதிகம் காணப்பட கூடிய இந்த தாவரத்தின் பூக்கள் வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய இரத்த புற்றுநோயை எதிர்க்கக்கூடிய மருத்துவத் தன்மை கொண்டது. இது போன்ற ஒரு மிகச்சிறந்த ரத்தப் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய மருத்துவ பயன் கொண்ட தாவரம் இல்லை என்றே கூறலாம். மேலும் சிறுநீர் கற்களை அழிக்க உதவுவதுடன், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் தீர்வு அளிக்க உதவுகிறது. உடல் அசதிக்கு இனி மருந்து வாங்கி குடிக்க தேவையில்லை.
இந்த நித்தியகல்யாணி தாவரத்தில் உள்ள பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை விட்டுக் குடித்து வந்தாலே உடல் களைப்பு அனைத்தும் நீங்கிவிடும். மேலும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதிலும் இந்த தாவரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இதன் வேரை தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது நீரிழிவு நோய் குணமாகிறது. இந்தச் செடியில் இருந்து எடுக்கப்பட கூடிய மூலப் பொருட்கள் மூலமாக புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. நாள்பட்ட புண் மற்றும் ஆழமான புண்களுக்கு கூட நித்தியகல்யாணி செடியின் இலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலம் போல காய்ச்சி பூசி வரும் பொழுது நிச்சயம் அது முழுமையாக குணமடையும்.