பில்லா திரைப்படம் சென்னையில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா..?

சென்னையில் பில்லா திரைப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடைபோற்று வருகிறது. அதைபோல் ஏற்கனவே வெளியான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வருகிறது அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா.
இந்த திரைப்படம் மிகசிறந்த கேக் ஸ்டார் படமாகும். ஹாலிவுட் ரேஞ்சிக்கு மிகவும் அருமையாக இருக்கும். ஸ்டைலிஷாக அஜித் நடித்த முதல் திரைப்படம் இதுதான். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையை செய்தது என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்போது இந்த பில்லா திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரீ ரிலீசாகும் என்று முன்பே அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னையில் மட்டும் எத்தனை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
#Billa Re-Release Chennai City Theatre List !!
• Sathyam
• Escape
• PVR
• Palazzo
• Woodlands
• AGS
• S-2 Perumbur#AjithsBILLAFromMarch12 #Valimai #AjithKumar— Ajith Network (@TeamAKnetwork) March 11, 2021