ஓடிடியில் “சார்பட்டா பரம்பரை” எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..??
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ ஓடிடியில் 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைபடத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை, துஷ்ரா விஜயன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலர் ஜூலை 13 ஆம் தேதி வெளியானது. டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் , இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேமில், வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் அமேசான் பிரேமில் எத்தனை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதாவது சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் பிரேமில் 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்யாவிற்கு அதிகம் வசூல் தந்த திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.