நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூரி, வினய்ராய், சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. மேலும், இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வழக்கமாக பாண்டிராஜ் எடுக்கும் கமர்ஷியல் படமாகமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு பிடித்த வாறு வேறொரு பாணியில் படத்தை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், வெளியான இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மட்டும் வெளியான இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் அதிகாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…