நடிகர் தனுஷ் D43 படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தில் நடித்து வருகிறார்.இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.அதை முடித்த பின்னர் தனுஷ்
தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் . பிப்ரவரி 9-ம் தேதி முதல் துவங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் முதல் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலில் D43 படத்தின் படப்பிடிப்பை தான் தனுஷ் முடிக்கவுள்ளதாகவும்,அதன் பின்னரே ஹாலிவுட் படத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘தி க்ரே மேன் படத்தினை அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கவுள்ளனர்.ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் ஆக உருவாக இருக்கும் இந்த படம் மார்க் க்ரேனேவின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…