சப்போட்டா பழத்திலுள்ள சிறப்பான நன்மைகள் பற்றி தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்!

Default Image

மெக்சிகோவை தாயகமாக கொண்ட சப்போட்டா பழம் தமிழில் சபோடில்லா எனவும் ஏழைகப்படுகிறது. சாதாரணமாக இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள சப்போட்டா பழம் தித்திக்கும் சுவை கொண்டது என்பதற்காக தான் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது. அவைகள் பற்றி அறியலாம் வாருங்கள்.

சப்போட்டாவின் பயன்கள்

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் பயிரிடப்பட கூடிய சப்போட்டா பழம் மிக அதிக அளவில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயமின், நியாசின் வைட்டமின் சி ஆகிய சத்துக்களை உள்ளடக்கியது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி காரணமாக உடலில் உள்ள ரத்த நாளங்களை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்க கூடிய சிறந்த குணத்தையும் இது கொண்டுள்ளது. இதயம் சம்பந்தமான கோளாறுகளை நீக்கி இதயம் சீராக இயங்க உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இயற்கை மருந்தாக சப்போட்டா பழம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படாது என கூறப்படுகிறது.

மேலும் சப்போட்டா பழச்சாறுடன் தேயிலைச் சேர்த்து பருகும் பொழுது ரத்தபேதி குணமடையும். இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் காரணமாக எலும்பு மண்டலம் முழுவதையும் வலுப்படுத்த உதவுகிறது. மேலும் குடல் புற்று நோய் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் மிகச் சிறந்த மருந்தாகும். ஆரம்ப நிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழத்தை ஜூஸ் ஆக எடுத்து குடிக்கும் பொழுது காச நோய் குணமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்னதாக ஒரு சப்போட்டா பழத்தை சாப்பிடும் பொழுது தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் நிச்சயம் அதிலிருந்து விடுபட முடியும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கக் கூடிய தன்மை கொண்ட இந்த சப்போட்டா பழம் கோடை காலத்தில் மிகவும் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்