கோவைக்காயில் உள்ள பயன்கள் பற்றி தெரியுமா….?
கோவைக்காய் என்பது அதிகமாக கிராம புறங்களில் கிடைக்க கூடிய ஒன்று. இது சாதாரணமாக காடுகளில் கூட கிடைக்க கூடிய ஒன்று தான். இது கோடி வகையை சேர்ந்தது.கோவைக்காய் காய், பழம் உணவாகவும், சமையலிலும் பயன்படுகிறது. இந்த பழங்களை சாப்பிட பறவையினங்கள் தேடி வந்து உண்ணும்.
இந்த காயின் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. இதில் பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
மருத்துவ பயன்கள் :
கண் நோய் :
கண் நரம்புகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது. கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால், கண் நரம்புகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது, கண் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
இரத்தத்தை சுத்திகரிக்கிறது :
சிறுநீரக கோளாறு, இரத்த சோகை மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, கோவை இலையை நிழலில் உலர்த்தி, பொடி செய்து தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்து குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
உடல் சூடு தணிக்க :
கோவையிலை கசாயம் செய்து குடித்து வந்தால், உடல் சூடு சமநிலையில் இருக்கும்.
வியர்க்குரு தடுக்க :
கோவையிலையை அரைத்து உடலெங்கும் பூசி வந்தால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம்.