அசத்தலான நண்டு ஆம்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி அறிவீரா ?
அசைவ பிரியர்களுக்கு நண்டு மிகவும் பிடித்தமான உணவாகும்.இந்த நண்டை வைத்து எப்படி அசத்தலான சுவையில் ஆம்லெட் செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
- நண்டு – 3
- வெங்காயம் – 2
- இஞ்சிபூண்டு-விழுது
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- மிளகாய்தூள் -1 ஸ்பூன்
- சீரகதூள்-1 ஸ்பூன்
- மல்லித்தூள்-1ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- சின்ன வெங்காயம்- 4 ஸ்பூன்
ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை-2
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
நண்டு ,வெங்காயம் – 2, இஞ்சிபூண்டு விழுது, மிளகு தூள்,மிளகாய்தூள் , சீரகதூள், மல்லித்தூள், உப்பு,கொத்தமல்லி இலை , சின்ன வெங்காயம் முதலியவற்றை தண்ணீர் வேக வைத்து எடுத்து கொள்ளவும். நண்டு ஆறியவுடன் சதை பகுதியை பிரித்து எடுக்கவும். பின்பு நண்டு வேக தண்ணீரை கிரேவி பதம் வரும் வரை வற்றவிடவும்.
பின்பு ஒரு பத்திரத்தை எடுத்து அதில் முட்டையை அடித்து சதைபகுதி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.ஒரு தோசை கல்லை அடுப்பில்வைத்து சூடேறியதும் அதில் எண்ணெய் ஊற்றி நண்டு ஆம்லெட் கலவையை ஊற்றி வேகவிடவும்.இப்போது சுவையான நண்டு ஆம்லெட் தயார்.