இந்த நோய்கள் உங்களுக்கு இருக்கா? அப்போ கண்டிப்பா பூண்டு சாப்பிடாதீங்க!
தமிழர்களின் சமையலை முழுமை செய்யும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது பூண்டு தான். பூண்டு இல்லாத சமையல் ஒன்று தமிழர்களிடம் இருக்காது. அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதிலும் ஆபத்து தரக்கூடிய சில விளைவுகள் உள்ளது.
பூண்டின் தீமைகள்:
தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டு அதிகம் சாப்பிட்டால் காயம் ஏற்பட்ட பகுதிகளை சுற்றி வீக்கம் வர வாய்ப்புள்ளது. கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் தாக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதால் இதை கல்லீரல் கோளாறுள்ளவர்கள் நிறுத்திக்கொள்ளலாம். வயிற்று போக்கு உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் குடலை இளக செய்து மேலும் வயிற்று பிக்கு ஏற்பட காரணமாகிறது. கண்களின் ஆரோக்கியத்தை பேண கண் கோளாறுகள் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ளலாம்.