தோசை சாப்பிட்டு இருப்பிங்க…!!! ஆனா பப்பாளி தோசை சாப்பிட்டு இருக்கீங்களா…?
தோசை என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தோசையை அனைவரும் விரும்பி உண்பதுண்டு. தோசையில் பல வகை தோசை உள்ளது. நாம் இப்பொது பப்பாளி தோசை செய்வது எப்படி என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
- தோசை மாவு – 2 கப்
- பப்பாளிபழத் துண்டுகள் – 2 கப்
- பச்சை மிளகாய் – 5 வெங்காயம் – 2
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
பப்பாளி தோசை செய்வதற்கு முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போடு நன்கு வதக்க வேண்டும். பிறகு கடைசியாக, பப்பாளிபழத் துண்டுகளை போட்டு இரண்டு நிமிடம் வதக்க வேண்டும்.
ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்து, தோசை மாவில் கலந்து தோசைகளாக வார்த்தெடுக்க வேண்டும் இப்பொது சுவையான, ருசியான பப்பாளி தோசை ரெடி.