உங்க வீட்டில் கடலை பருப்பு இருக்கா…? அப்போ உடனே இதை செஞ்சு பாருங்க!
மாலை நேரங்களில் வீட்டில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது வடை இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்குமே வடை சாப்பிடுவது விருப்பம் தான். ஆனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டில் ஏதாவது செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இன்று வீட்டிலேயே கடலைப் பருப்பை வைத்து எப்படி மினி வடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, உப்பு, எண்ணெய்.
செய்முறை
முதலில் கடலைப்பருப்பை 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு பௌலில் அரைத்த கடலை மாவை கொட்டி, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து வைக்கவும்.
இந்த மாவை ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, அதன் பின்பு சிறிய சிறிய உருண்டைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான கடலைப்பருப்பு மினி வடை தயார்.