உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? அப்ப இதை மட்டும் பண்ணுங்க?

சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபட, நாம் பல வகையான வழிமுறைகளை கையாள்வதுண்டு. ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பது சகஜமாகி உள்ளது. அனால், இந்த சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபட, நாம் பல வகையான வழிமுறைகளை கையாள்வதுண்டு. ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும்.
உடல் பருமன்
இன்று பலரும் தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளின் மீது தான் அதிகப்படியான ஆர்வம் காட்டுகிறோம். இதனால், நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இந்த உடல்பருமனால், நமது உடலில் சர்க்கரை நோய் மற்றும் பல பிராச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெந்தயம்
இரவில் வெந்தயத்தை ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் அதனை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வழுவழுப்பான தன்மை நமது, குடலோடு ஒட்டிக் கொள்ளும். இதனால், நாம் இனிப்பு சம்பந்தமான பொருட்களை சாப்பிடும் போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
கொழுப்பு சத்து
கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கொழுப்பு சத்து உள்ள உணவுகள் உட்கொள்ளும் போது, நமது உடலி பருமன் அதிகரிப்பதோடு, இது நீரிழிவு பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
உணவு பழக்கம்
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் 3 வேளை சாப்பிடாமல், அதே உணவை 4 அல்லது 5 வேளை சாப்பிட வேண்டும். இதனால் ஒரே நேரத்தில் அதிகப்படியான சர்க்கரை உடலில் சேர்வதை தவிர்க்க முடியும்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025