வீட்டில் காலிஃபிளவர் இருக்கா? அப்ப உடனே இத செஞ்சு பாருங்க!

மாலை நேரத்தில் ஏதாவது சூடாக, மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது? எப்பொழுதும் போல வடை செய்து சாப்பிடுவதை விட வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிடலாம். இன்று காலிஃபிளவர் வைத்து பாப்கான் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- காலிஃபிளவர்
- எண்ணெய்
- சோயா சாஸ்
- சில்லி சாஸ்
- எலுமிச்சை சாறு
- இஞ்சி பூண்டு விழுது
- மிளகாய்த்தூள்
- மிளகுத்தூள்
- உப்பு
- கோதுமை மாவு
- சோள மாவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து விட்டு காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இந்த கொதித்த தண்ணீரில் 5 முதல் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின்பதாக இந்த காலிஃப்ளவரை ஒரு பவுலில் எடுத்து அதில் பொரிப்பதற்கு முன்பதாக சோள மாவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி வைத்துக்கொள்ளவும். இவை ஒரு 20 நிமிடம் ஊற வைத்த பின்பு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அட்டகாசமான காலிஃபிளவர் பாப்கார்ன் தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025