நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும்.
அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உபயோகிக்கும் முறை : ஆலிவ் எண்ணையுடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக பேஸ்ட் போல தயாரித்து தலை முழுவதும் தடவி விடவும்.
இடைப்பட்ட காலம் : தலையில் தடவி 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் சாதாரண ஷாம்பு பயன்படுத்தி அலசி விடவும். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை : முட்டையின் வெள்ளை கருவுடன், இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணையை கலந்து முடியில் நன்றாக தடவி விடவும்.
இடைப்பட்ட காலம் : தலை முடியில் எண்ணையை தடவி 30 நிமிடம் வைத்திருந்து விட்டு, ஷாம்பு உபயோகித்து அலசி விடவும். இதை வாரம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முறை : வெங்காய சாற்றுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து, நன்றாக கலந்து இந்த கலவையை முடியில் தேய்த்து விடவும்.
இடைப்பட்ட காலம் : நன்கு ஊறியதும் 30 முதல் 40 நிமிடத்தில் தலையை அலசி விடவும். இதை வாரம் இரு முறை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை : இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணையில், அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்க்கவும்.
இடைப்பட்ட காலம்: தலையில் தடவி 1 மணி நேரம் முதல் 3 மணி நேரங்கள் வரை இதை அப்படியே ஊற விடலாம். பின் நன்றாக தலையை அலசி விடவும்.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…