உங்களிடம் சூயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளதா..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு..!
சூயிங்கம் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய சில நன்மைகள்.
நம்மில் பெரும்பாலானோரிடம் சுயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிலர் தங்களது சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கும் மற்றும் சிலர் பசியை உணராமல் இருப்பதற்காகவும் சாப்பிடுகின்றனர். ஆனால் இது ஆரோக்கியமற்றது என கருதப்பட்டாலும், சூயிங்கம் சாப்பிடுவதால் சில நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம்.
மன அழுத்தத்தை குறைக்கிறது
நம்மில் பலர் தொடர்ந்து வேலை வேலை என இருப்பதால் மன அழுத்தத்தில் காணப்படுகின்றன. சூயிங்கம் சாப்பிடுவதால் இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று சில ஆய்வுகள் கூறுகிறது. சுயிங்கம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அளவை குறைப்பதுடன் நிதானமாகவும், அமைதியாகவும் உணரச் செய்கிறது.
மூளையை சுறுசுறுப்பாக்குகிறது
நமது மூளைதான் நமது உடலை இயக்கும் சக்தி. அதாவது நமது நினைவகத்தை மேம்படுத்தவும், மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் நாம் பலவகையான உணவுகளை உட்கொள்ளலாம். இருப்பினும், மூளையின் சக்தி அதிகரிக்க சூயிங்கம் சாப்பிடலாம் என சில ஆய்வுகள் கூறுகிறது. இவ்வாறு சாப்பிடுவதால், நமது மூளையை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வதும், பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
புத்துணர்ச்சி
நாம் நமது வேலைகளில் அதிகமாக கவனம் செலுத்தினாலும், ஒரு சில சமயங்களில் சோர்வாகவும் அல்லது நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வும் காணப்படலாம். இப்படிப்பட்ட சமயங்களில் புத்துணர்ச்சியுடன் இருக்க சுயிங்கம் சாப்பிடலாம். இது புத்துணர்ச்சியை தருவதால் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.