உங்களுக்கு கழுத்து பகுதி கருமையா இருக்கா ….? இதை ட்ரை பண்ணுங்க..!

Default Image

உடல் பகுதி வெள்ளையாக இருந்தாலும் கழுத்துப் பகுதி கருமை நிறமாக தோற்றம் அளிப்பது பலருக்கும் இருக்கும் சாதாரணமான பிரச்சனை தான். ஆனால் முகம் வெள்ளையாக இருந்து கழுத்துப்பகுதி கருமையாக இருக்கும் பொழுது வித்தியாசமாக தெரிவதுடன், மட்டுமல்லாமல் பலருக்கு அவ்வாறு இருப்பது பிடிக்காது.

மேலும் அது நமது அழகையும் பாதிக்கும். எனவே இந்த கழுத்துப் பகுதியை வெண்மையாக்க பலர் வெளியில் கிடைக்கக்கூடிய க்ரீம்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். இது உடனடியாக பலன் கொடுத்தாலும் நீண்ட காலத்திற்கு பலனளிக்காது. மீண்டும் அதே கருமையை தோன்றச் செய்யும். எனவே, இன்று நாம் வீட்டிலேயே எந்த பொருளை உபயோகித்தால் நிரந்தரமாக கழுத்தில் உள்ள கருமையை நீக்க முடியும் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேங்காய் எண்ணெய்

உபயோகிக்கும் முறை : குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணையை நன்றாக சூடாக்கி தங்கி கொள்ளும் மிதமான சூட்டில் பஞ்சில் தொட்டு கழுத்து பகுதியில் தடவவும்.

இடைப்பட்ட காலம் : வாரத்தில் மூன்று முறை குளிப்பதற்கு முன்பாக இவ்வாறு செய்யவும், ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் கடலை மாவு

உபயோகிக்கும் முறை : 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிதளவு கடலை மாவு கலந்து நன்றாக பேஸ்ட் போல தயாரித்து கழுத்தில் பூசவும்.

இடைப்பட்ட காலம் : இதை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை உபயோகிக்கவும். சருமத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை பளபளப்பாகவும் வெண்மையாகவும் மாற்றும்.

உருளைக்கிழங்கு சாறு

உபயோகிக்கும் முறை : வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உருளைக்கிழங்கு சாற்றை கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

இடைப்பட்ட காலம்: வாரத்திற்கு நான்கு முறை இந்த உருளைக்கிழங்கு  சாற்றை கழுத்தில் உபயோகிக்கலாம்.

பாதாம் எண்ணெய்

உபயோகிக்கும் முறை : கழுத்து பகுதியில் பாதம் எண்ணையை பஞ்சின் உதவியுடன் நன்றாக தடவவும், 10 நிமிடங்கள் கழித்து துணியை வைத்து துடைத்து விடவும் அல்லது தண்ணீரில் கழுவவும்.

இடைப்பட்ட காலம் : இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, இதை தினமும் உபயோகிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்