தினமும் பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?
தினமும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் :
பழங்கள் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.இதில் போடோ கெமிக்கல்ஸ் நிரம்பி இருப்பதால் நமது உடலில் உள்ள திசுக்களை அழியாமல் பாதுகாக்கிறது.இதனால் நாம் பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
நாம் பழங்களை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.தினமும் பழங்களை சாப்பிடுவதால் புற்று நோய்,இதய கோளாறு ,மாரடைப்பு ,மறதி போன்ற பல நோய்களை தடுக்கலாம்.
இந்த வகையில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு காணலாம்.
- மாதுளை பழத்தை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கருப்பை பாதிப்பு ,வயிற்று கோளாறு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
- யானைக்கால் நோய் உள்ளவர்கள் தினமும் சிறிதளவு பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறைந்து உடலில் வலிமை சேரும்.
- தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் மூளை செயல்திறனை அதிகரிக்கும். செவ்வாழைப்பழம், மலைவாழைப்பழம் சாப்பிடுவதால் மூளையின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும்.
- காலை உணவிற்கு பதிலாக இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் செரிமானம் தூண்ட பெற்று பித்தம் மாதிரியான நோய்கள் முற்றிலும் விலகும்.
- அரசம் பழத்தை சாப்பிடுவதால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதோடு தரமான விந்தணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது.
- மலச்சிக்கலில் இருந்து விலக வில்வப் பழத்தை பாலில் கலந்து சாப்பிடலாம்.இது வயிற்று புண்ணை ஆற்றுவதுடன் சிறுநீரகம் நன்கு செயல்பட உதவுகிறது.